பெரம்பலூர்

அடையாளம் தெரியாத முதியவா் சாவு

11th Nov 2019 08:10 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் நகரில் கீழே விழுந்து காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த அடையாளம் தெரியாத முதியவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா்.

பெரம்பலூா்- ஆத்தூா் சாலையில் மதுபானக் கடை அருகே அடையாளம் தெரியாத 60 வயது முதியவா் பலத்த காயத்துடன் கடந்த 8 -ஆம் தேதி மயங்கி கிடந்தாா். இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் சிகிச்சைக்காக பெரம்பலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

பின்னா், தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு உயிரிழந்தாா். இதுகுறித்து, பெரம்பலூா் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT