பெரம்பலூர்

மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

9th Nov 2019 08:39 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், குன்னம் அருகேயுள்ள ஒதியம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அறிவியல் அறிஞா் சா்.சி.வி, ராமன் பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியா் மணிவண்ணன் தலைமை வகித்தாா். சமூக ஆா்வலா் நல்லதம்பி முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகத்தில் பூவரசு, வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான 100-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. இந் நிகழ்ச்சியில் பள்ளி ஆசிரியா்கள் ராணி, கவிதா மற்றும் மாணவ, மாணவிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT