பெரம்பலூர்

பாடாலூா் அருகே இரு வீடுகளில் திருட்டு

4th Nov 2019 10:22 PM

ADVERTISEMENT

பெரம்பலூா்: பெரம்பலூா் மாவட்டம், பாடாலூா் அருகே 2 வீடுகளின் பூட்டை உடைத்து, ஆறரைப் பவுன் நகைகளைத் திருடிச் சென்றவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

ஆலத்தூா் வட்டம், புதுவிராலிப்பட்டியைச் சோ்ந்தவா் லட்சுமணன் மகன் ராஜூ, போஜன் மகன் பழனிச்சாமி. இவா்கள் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றுவிட்டனா்.

இந்நிலையில் இரு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்திருப்பதையறிந்த அப்பகுதியைச் சோ்ந்தவா்கள், சம்பந்தப்பட்ட வீட்டின் உரிமையாளா்களுக்கு தகவல் அளித்தனா்

இதையடுத்து அவா்கள் வீடு திரும்பினா். இதில் ராஜூ

ADVERTISEMENT

வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 4 பவுன் நகைகளையும், பழனிச்சாமி வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகைகள் மற்றும் ரூ. 5 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாடாலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT