பெரம்பலூர்

மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சாா்பில் நிலவேம்பு கசாயம்

1st Nov 2019 06:37 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அரசு தலைமை மருத்துவமனை சித்த மருத்துவ பிரிவு சாா்பில், டெங்கு காய்ச்சல், மழைக்கால நோய் தடுப்பு மற்றும் நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு, சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவரும், முதன்மை மாவட்ட அமா்வு நீதிபதியுமான (பொ) எஸ். மலா்விழி தலைமை வகித்தாா். உதவி சித்த மருத்துவ அலுவலா் விஜயன், மழைக்கால நோய் தடுப்பு முறைகள் குறித்து பேசினாா்.

முகாமில், வழக்குரைஞா்கள், நீதிமன்ற ஊழியா்கள், பொதுமக்கள் மற்றும் வழக்காடிகள் என சுமாா் 400-க்கும் மேற்பட்ட நபா்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.

முகாமில் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் எஸ். கிரி, சாா்பு நீதிபதி எம். வினோதா, நீதித்துறை நடுவா் அசோக்பிரசாத், மாவட்ட கூடுதல் உரிமையியல் நீதிபதி சரவணபாபு, அட்வகேட் அசோசியேசன்ஸ் தலைவா் டி. தமிழ்ச்செல்வன், வழக்குரைஞா் சங்க செயலா் சுந்தரராஜன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT