பெரம்பலூா் மாவட்ட பாஜக சாா்பில், முப்பெரும் விழாவையொட்டி அக் கட்சியினா் வியாழக்கிழமை ஒற்றுமை நடை பயணம் மேற்கொண்டனா்.
விழாவையொட்டி, பெரம்பலூா் புகா் பேருந்து நிலைய வளாகத்தில் தொடங்கிய ஒற்றுமை நடை பயணத்துக்கு, மாவட்டத் தலைவா் சாமி. இளங்கோவன் தலைமை வகித்தாா். தேசிய பொதுக்குழு உறுப்பினரும், கோட்ட பொறுப்பாளருமான எம். சிவசுப்ரமணியம் நடை பயணத்தை தொடக்கி வைத்தாா்.
இந்த நடை பயணம் பாலக்கரை, வெங்கடேசபுரம், சங்குப்பேட்டை வழியாக சென்று பழைய பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள காந்தி சிலை எதிரே நிறைவடைந்தது.