முதன்மை நிலை விளையாட்டு விடுதிகளில் சேர அழைப்பு

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமியர் முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.   
இதுகுறித்து பெரம்பலூர் மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் ம. ராம சுப்ரமணியராஜா வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர், சிறுமியர்களுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப சிறந்த பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் செயல்படுகின்றன. 
சிறுவர்களுக்கான  விடுதிகள் சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய இடங்களிலும், சிறுமிகளுக்கான விடுதிகள் சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களிலும் செயல்படுகின்றன.
மேற்கண்ட விடுதிகளில் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்க 6, 7, 8 ஆகிய வகுப்புகளில் சிறுவர், சிறுமியர்களுக்கான மாநில அளவிலான தேர்வு மே 21 காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது.
சிறுவர்களுக்கான தடகளம், இறகுப்பந்து, குத்துச்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், டென்னிஸ், நீச்சல் ஆகிய விளையாட்டுகளிலும், சிறுமியர்களுக்கான தடகளம், இறகுப்பந்து, மேசைப்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ் ஆகிய விளையாட்டுகளிலும் சிறந்து விளங்க, ஆர்வம் உள்ள மாணவ, மாணவிகள் 2019- 2020 ஆம் ஆண்டு சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் ‌w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n   
  என்னும் இணையதள முகவரியில் கிடைக்கும்.  
ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை மே 20 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com