பெரம்பலூர்

மளிகைக் கடை, வீட்டில் பொருள்கள் திருட்டு

29th Jun 2019 09:32 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகே மளிகைக் கடை மற்றும் வீட்டில் ரூ. 1 லட்சம் மதிப்பிலான ரொக்கம், பொருள்கள் திருடப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது. 
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில், பெரம்பலூர் அருகேயுள்ள தண்ணீர்ப்பந்தல் பகுதியில்  மளிகைக் கடை நடத்தி வரும் கணேசன் வெள்ளிக்கிழமை காலை கடையைத் திறக்க வந்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, ரூ. 7 ஆயிரம் ரொக்கம், 10 அரிசி மூட்டை உள்ளிட்ட பல பொருள்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 
இதேபோல, அந்த மளிகைக் கடையின் அருகே தனது வீட்டின் மாடியில் தூங்கிக் கொண்டிருந்த கோவிந்தராஜ்,  வெள்ளிக்கிழமை அதிகாலை கீழே வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த ரூ. 50 ஆயிரம் ரொக்கம், எரிவாயு உருளை உள்ளிட்டவை திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. 
வீடு, கடையில் திருடுபோன பொருள்களின் மொத்த மதிப்பு ரூ. 1 லட்சம் எனக் கூறப்படுகிறது. தகவலறிந்த பெரம்பலூர் போலீஸார் நிகழ்விடத்தில் விசாரணை நடத்தி, அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான விவரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிந்து விசாரணை செய்கின்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT