பெரம்பலூர்

வழிப்பறி: இளைஞருக்கு கத்திக்குத்து

31st Jul 2019 10:11 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் நகரில் மோட்டார் சைக்கிளில் சென்றவரை வழிமறித்து, பணம் கேட்டு மிரட்டி தர மறுத்ததால் இளைஞரை கத்தியால் குத்திய நபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர். 
பெரம்பலூர் நகரைச் சேர்ந்தவர் அப்துல் கலாம் மகன் அப்சல் (31). இவர், செவ்வாய்க்கிழமை இரவு பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் உள்ள அரசு மதுபானக்கடை அருகே மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, அங்கு நின்றிருந்த அடையாளம் தெரியாத ஒரு கும்பல், அப்சலை வழிமறித்து அவரிடம் பணம் கேட்டு மிரட்டியதாகக் கூறப்படுகிறது. ஆனால், அவர் பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அப்சலை கத்தியால் குத்திவிட்டு, அவரிடம் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். 
இதையறிந்த அப்பகுதியைச் சேர்ந்த சிலர், பலத்த காயமடைந்த அப்சலை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அப்சல் அளித்த புகாரின்பேரில், பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT