பெரம்பலூர்

பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆக. 7, 9-இல் கவிதை, கட்டுரை போட்டிகள்

31st Jul 2019 10:12 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அனைத்து மேல்நிலைப்பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்டத் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் ஆக. 7, 9 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. 
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள் ஆக. 7 ஆம் தேதியும், கல்லூரி மாணவர்களுக்கான போட்டிகள் 9 ஆம் தேதியும் காலை 9 மணிக்கு பெரம்பலூர் சீனிவாசன் கலை, அறிவியல் கல்லூரியில் நடைபெற உள்ளது. 
இப்போட்டியில் பங்கேற்பதற்கான விண்ணப்பம் மற்றும் விதிமுறைகள் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநரால் தலைமை ஆசிரியர்களுக்கும், கல்லூரி முதல்வர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 
போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ள மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியர்/ கல்லூரி முதல்வரின் ஒப்புதலுடன் போட்டி நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு போட்டி நடைபெறும் இடத்துக்கு வர வேண்டும். முதல் 3 இடங்களில் வருவோருக்கு முறையே ரூ. 10 ஆயிரம், ரூ. 7 ஆயிரம் மற்றும் ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும்.  
முதல் பரிசு பெற்றவர்கள் மாநில அளவிலான போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். போட்டிகளுக்கு, மாவட்டத் தமிழ் வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் க. சித்ரா ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார் என மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT