பெரம்பலூர்

தீவன அபிவிருத்தி திட்டத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு

31st Jul 2019 10:14 AM

ADVERTISEMENT

கால்நடை பராமரிப்புத் துறை மூலம் 2019- 20 ஆம் ஆண்டில் மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
பெரம்பலூர் மாவட்டத்தில் கால்நடை வளர்க்கும் நீர்ப்பாசன வசதிகொண்ட விவசாயிகள் நிலத்தில் அதிக விளைச்சல் தரக்கூடிய பசுந்தீவனங்களை பயிரிட பலதரப்பட்ட விதைகள் கொள்முதல் செய்ய, 100 சதவீதம் மானியமாக மொத்தம் 10 சென்டுக்கு ரூ. 550 வீதம் வழங்க 100 ஏக்கருக்கு பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். 
நீர்ப்பாசன வசதியில்லாத மானாவாரி நிலப்பகுதிகள் கொண்ட கால்நடை வளர்க்கும் விவசாயிகளுக்கென மானாவாரி தீவனச் சோளம் மற்றும் தட்டைப்பயிறு வளர்க்கும் திட்டத்தின் கீழ் 500 ஏக்கர் நிலப்பரப்பில் சாகுபடி செய்ய பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இத்திட்டங்களில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள கால்நடை உதவி மருத்துவரை அணுகி விண்ணப்பித்து பெயரை பதிவு செய்துகொள்ளலாம் என மாவட்ட கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT