பெரம்பலூர்

பணத்தை மீட்டுத்தரக்கோரி ஆட்சியர், எஸ்.பி-யிடம் புகார்

30th Jul 2019 09:59 AM

ADVERTISEMENT

தனியார் நிதி நிறுவனத்தின் மூலம் பணம் வசூலித்து, மோசடியில் ஈடுபட்ட பெண்ணின் குடும்பத்தினரிடம் இருந்து தொகையை மீட்டுத்தரக்கோரி பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷா மித்தல் ஆகியோரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
இதுகுறித்து, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 80-க்கும் மேற்பட்டோர் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:
கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருவதாகவும், அந்நிறுவனத்தில் மாதம்தோறும் சந்தா செலுத்தினால் 5 ஆண்டுகளுக்குப் பிறகு கூடுதல் வட்டியுடன் அசல் தொகை வழங்கப்படும் எனத் தெரிவித்தாராம். இதையறிந்த அந்த கிராமத்தைச் சேர்ந்த சுமார் 80-க்கும் மேற்பட்டோர் ஆண்டுக்கு ரூ. 30 ஆயிரம் முதல் ரூ. 1 லட்சம் வரை என, பல லட்ச ரூபாய் அந்த பெண்ணிடம் செலுத்தியதாக கூறப்படுகிறது. 
5 ஆண்டுகள் கடந்தும், பொதுமக்கள் செலுத்திய தொகையை அந்தப் பெண் திருப்பித் தரவில்லையாம். இதனால், பாதிக்கப்பட்ட பொதுமக்கள் அந்தப் பெண்ணிடம் கேட்டதற்கு வட்டியுடன் அசல் தொகையை பெற்றுத் தருவதாக உறுதியளித்தாராம். இதனிடையே அந்தப் பெண் உயிரிழந்துவிட்டாராம். இதையடுத்து, பெண்ணின் பெற்றோரிடம் கேட்டதற்கு தர மறுத்தனராம்.  இதையடுத்து, தாங்கள் செலுத்திய தொகையை சம்பந்தப்பட்ட பெண்ணின் பெற்றோரிடமிருந்து பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்தனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT