பெரம்பலூர்

மின் வாரியத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்

29th Jul 2019 10:23 AM

ADVERTISEMENT

மின் வாரியத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டுமென,  தமிழ்நாடு மின்வாரியத் தொழிலாளர், பொறியாளர்கள் ஐக்கிய சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வட்டப்  பொதுக்குழு கூட்டத்துக்கு வட்டத் தலைவர் கே. பழனிவேல் தலைமை வகித்தார். துணைத் தலைவர் எம். அன்பழகன், இணைச் செயலர்கள் பி. நீலமேகன், எஸ். ராமசுவாமி, என். ராமசாமி, அமைப்பு செயலர் பி. மின்னல் கபீப்  முன்னிலை வகித்தனர். 
 மாநிலப் பொதுச்செயலர் மு. சுப்ரமணியன், மாநிலத் தலைவர் சி. கண்ணன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். 
இக்கூட்டத்தில், 2009-இல் நேரடி பணி நியமனம் செய்யபப்ட்ட தொழிற்கல்வி தொழிலாளர்களில் இளையவர்கள், மின்பாதை ஆய்வாளர் பதவி உயர்வு பெற்ற நிலையில், வணிக உதவியாளர் பதவியில் பதவி உயர்வின்றி உள்ள மூத்தப்  பணியாளர்களுக்கு உபரி வணிக பதவி வழங்கிட வேண்டும்.  நீதிமன்ற உத்தரவுப்படி பயிற்சி காலத்துக்கான ஊதியம், ஆண்டு உயர்வுகளை பணப்பலன்களுடன் பெற்றுத்தர வேண்டும். மின் வாரியத்தில் காலியாக உள்ள28 ஆயிரம் களப்பணியிடங்களை தொழிற்கல்வி படித்தோரை கொண்டு நிரப்ப வேண்டும். 
அரியலூர், பெரம்பலூர் கோ ட்டங்களை இரண்டாகப் பிரிக்க வேண்டும்.
அனைத்துப் பணியாளர்களுக்கும் பழைய ஓய்வூதியத் திட்டம் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில், மாநிலச் செயலர் ஆர். முத்துசாமி, வட்ட அமைப்பு செயலர்கள் எஸ். கண்ணதாசன், என். பாலசுப்ரமணியன், வட்டச் செயலர் ஏ. சின்னசாமி, வட்ட பொருளாளர் ஆர். சங்கர் மகளரணி செயலர் கே. செல்வி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
முன்னதாக வட்டத் துணைத் தலைவர் ஜி. முருகானந்தம் வரவேற்றார். நிறைவில் பெரம்பலூர் கோட்டத் தலைவர் ஜி. ரமேஷ் நன்றி கூறினார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT