பெரம்பலூர்

எமாபுரீசுவரர் கோயிலில் சிறப்பு பூஜை

29th Jul 2019 10:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகச் சாலை,அபிராமபுரத்திலுள்ள  ஸ்ரீ பொன்னம்பல எமாபுரீசுவரர் கோயில் ஆடிமாத சிறப்பு பூஜை  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். அதன் நிகழாண்டு பூஜையையொட்டி,  சனிக்கிழமை இரவு பெரம்பலூர் 13- ஆவது வார்டில் உள்ள வழிபாட்டுத் தலத்திலிருந்து பால்குடம் மற்றும் கரங்களுடன் நகரின் பிரதான சாலைகள் வழியாக சென்ற ஊர்வலம், ஸ்ரீபொன்னம்பல எமாபுரீசுவரர் கோயிலை வந்தடைந்தது. அங்கு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாடு நடத்தினர். பூசாரிகள் தங்கராசு, வேலு, கர்ணன், குமார், பொன்னுசாமி, பிச்சை, பாண்டியன் ஆகியோர் சிறப்பு பூஜைகள் செய்தனர்.   
அதைத்தொடர்ந்து, ஞாயிற்றுக்கிழமை பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் பலர் தங்களது நேர்த்திக் கடனைச் செலுத்தினர். நிகழ்வுக்கு காரியக்காரர் சரவணன் தலைமை வகித்தார். கண்ணபிரான், நகராட்சி முன்னாள் தலைவர் சி. ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  ஏராளமான பக்தர்கள் பூஜையில் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT