பெரம்பலூர்

பெரம்பலூருக்கு வந்தடைந்தது கலாம் ஜோதி

27th Jul 2019 08:56 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் ஸ்ரீ சாரதா மகளிர் கலை மற்றும் கல்லூரிக்கு, நல்லோர் வட்ட அமைப்பை சேர்ந்த உறுப்பினர்களின் கலாம் ஜோதி வெள்ளிக்கிழமை வந்தடைந்தது.
இந்தியா தொலைநோக்கு - 2020 என்பது இந்திய அறிவியல் தொழில்நுட்பத் தகவல் முன்னறிவிப்பு மற்றும் கணிப்புக் குழுவால் வெளியிடப்பட்ட ஒரு ஆவண அறிக்கையாகும். 
இத்திட்டத்தை, சென்னையைச் சேர்ந்த புருஷோத்தமன், ஒருங்கிணைப்பாளர் பாலு, உறுப்பினர் அன்பு ஆகியோர் நல்லோர் வட்டம் எனும் அமைப்பு ஏற்படுத்தி, சென்னை முதல் ராமேசுவரம் வரையுள்ள அனைத்துக் கல்லூரிகளுக்கும் சென்று கல்லூரி மாணவ, மாணவிகளிடையே அப்துல் கலாம் விஷன் - 2020 குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.  
பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை வந்தடைந்த இக்குழுவினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார். செயலர் எம்.எஸ். விவேகானந்தன் முன்னிலை வகித்தார். 
நல்லோர் வட்ட ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன், கலாம் ஜோதியின் சிறப்புகளையும், உறுப்பினர் அன்பு, அப்துல் கலாமின் விஷன் - 2020 குறித்தும் விளக்கி பேசினர். தொடர்ந்து, கல்லூரி மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர். 
இந் நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் எம். சுபலெட்சுமி மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறைத்தலைவி வி. கற்பகம் தலைமையில், அனைத்துத் துறை பேராசிரியர்கள் செய்திருந்தனர்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT