பெரம்பலூர்

ஜூலை 29-இல் வங்கிக் கடன் விடுவித்தல் முகாம்

27th Jul 2019 08:55 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டத்தில் புதிய சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் விடுவித்தல் முகாம் ஜூலை 29 ஆம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா  வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 
ஊரக மற்றும் நகர்புற பகுதிகளிலுள்ள மகளிரை சுய உதவிக் குழுக்களில் இணைத்து, அதன்மூலம் அவர்களின் வறுமை நிலையை மாற்றவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  
இந்த இயக்கத்தின் சார்பில், சுய உதவிக்குழு வங்கிக் கடன் இணைப்பு மாதமாக ஜூலை கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஊரக மற்றும் நகர்ப்புற பகுதிகளிலுள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வட்டார அளவில் வங்கி கடன் வழங்க மதிப்பீடு முகாம்கள் நடத்தப்பட்டு, கடன் விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட  கிளைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.  
வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட விண்ணப்பங்களுக்குத் தீர்வு காண வசதியாக, பெரம்பலூர் மாவட்டத்தில் சுய உதவி குழுக்களுக்கு வங்கிக் கடன் விடுவித்தல் ஜூலை 29  ஆம் தேதி முகாம் நடைபெற உள்ளது. இது தொடர்பான விரிவான சுற்றறிக்கை அனைத்து வங்கி கிளைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
இந்த முகாம் நடைபெறும் நாளில் மகளிர் சுய உதவிக் குழு பிரதிநிதிகள் தங்களது கடன் விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ள சம்பந்தப்பட்ட வங்கி கிளைகளை அணுகி, வங்கி கடன் பெற்று தங்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்ளலாம்.  

ADVERTISEMENT
ADVERTISEMENT