பெரம்பலூர் மாவட்டக் காவல் நிலையங்களில் பதிவான கொலை மற்றும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டோருக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் இழப்பீடு வழங்க மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
இந்த மாவட்டத்திலுள்ள காவல் நிலையங்களில் பதிவான 5 கொலை மற்றும் பாலியல் குற்ற வழக்கு விசாரணை மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்குகளில் நீதிமன்ற தீர்ப்பின்படி, பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், அவர்களது வாரிசுதாரர்களுக்கும் உரிய இழப்பீடு வழங்கிட, மாவட்ட சட்டப்பணிக்குழுவுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.
அதனடிப்படையில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதியுமான டி. லிங்கேசுவரன், வழக்குகளை விசாரித்து கொலை மற்றும் பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்ட நபர்களுக்கும், அவர்களது வாரிசுகளுக்கும் இழப்பீடு தொகையாக ரூ. 12.75 லட்சம் வழங்கிட வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.
இதில், அதிகபட்சமாக 3 நபர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் ரூ. 6 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.