பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் வியாழக்கிழமை பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற காலம் சார்ந்த ஊதியம் வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கையை கைவிட வேண்டும். மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் வியாழக்கிழமை காலை 2 மணி நேரம் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்ட தலைமை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் மேற்கண்ட சங்கத்தைச் சேர்ந்த மருத்துவர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டதால், காலை 7.30 முதல் 9.30 மணி வரை சிகிச்சைக்காக சென்ற நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.