பெரம்பலூர்

மின்னல் பாய்ந்து பெண் பலி

15th Jul 2019 08:53 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை அருகே ஞாயிற்றுக்கிழமை மாலை மின்னல் பாய்ந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்தார்.
வேப்பந்தட்டை அருகேயுள்ள பசும்பலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி மனைவி செல்வி (45). இவருக்குத் திருமணமாகி 3 பிள்ளைகள் உள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை காலை தனது வயலுக்கு செல்வி விவசாய வேலைக்காகச் சென்றிருந்தார். வேப்பந்தட்டை வட்டாரத்தில் இடி, மின்னலுடன் பரவலான மழை பெய்தது. அப்போது, மரத்தின் அடியில் செல்வி மழைக்கு ஒதுங்கி நின்றிருந்தபோது, மின்னல் பாய்ந்ததில் செல்வி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து, வி.களத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT