பெரம்பலூர்

நீதிமன்ற வளாகத்தில்  மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி

15th Jul 2019 08:53 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பொது மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி டி. லிங்கேஷ்வரன் மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தார். 
தொடர்ந்து, வேம்பு, பூவரசு, வாகை உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நட்டு வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமர்வு நீதிபதி எஸ். மலர்விழி, தலைமை நீதித்துறை நடுவர் எஸ். கிரி, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலரும், சார்பு நீதிபதியுமான எம். வினோதா, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ரவிச்சந்திரன், கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி ப. கருப்பசாமி, நீதித்துறை நடுவர் அசோக் பிரசாத் உள்பட பலர் பங்கேற்றனர்.   
 

ADVERTISEMENT
ADVERTISEMENT