பெரம்பலூர்

சிறுவாச்சூரில் ஜூலை 16 மின்தடை

15th Jul 2019 08:52 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) மின் விநியோகம் இருக்காது. 
பெரம்பலூர் மின் கோட்டத்துக்குள்பட்ட சிறுவாச்சூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், அங்கிருந்து மின் விநியோகம் பெறும் கிராம பகுதிகளான சிறுவாச்சூர், அய்யலூர், விளாமுத்தூர், செட்டிக்குளம், நாட்டார்மங்கலம்,குரூர், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகர், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூர், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகர் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் அசோக்குமார் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT
ADVERTISEMENT