பெரம்பலூர்

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் சேர அழைப்பு

4th Jul 2019 09:25 AM

ADVERTISEMENT

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுகளில் 2019- 2020 ஆம் ஆண்டுக்கான மாணவ,  மாணவிகள் சேர்க்கைக்கு ஜூலை 9 க்குள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: 2019- 2020 ஆம் கல்வியாண்டில் காலியாக உள்ள 23 இடங்களுக்கு 2 ஆம் கட்டமாக மாநில அளவிலான தேர்வுகள் ஜூலை 10 காலை 8 மணிக்கு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கில் மாணவிகளுக்கான தடகளம், மேசைப்பந்து, மாணவர்களுக்கான ஜிம்னாஸ்டிக்ஸ், இருபாலருக்குமான நீச்சல் ஆகியவை சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 
மேலும், முதன்மை நிலை விளையாட்டு மையம் சிறுவர்களுக்கான இறகுப்பந்து விளையாட்டு சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டு அரங்கிலும், ஸ்ரீரங்கம் விளையாட்டு விடுதியிலும் செயல்படுகிறது. 
ஜிம்னாஸ்டிக்ஸ், நீச்சல், டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளுக்கான விடுதி திருநெல்வேலியிலும், சிறுமியர்களுக்கான முதன்மை நிலை விளையாட்டு மையம், தடகள விளையாட்டு சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கிலும், மேசைப்பந்து, நீச்சல் ஆகிய விளையாட்டுக்களுக்கான விடுதி ஈரோட்டிலும் செயல்படுகிறது. 
விளையாட்டு மைய விடுதிகளில் மாணவ, மாணவிகள் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவம் w‌w‌w.‌s‌d​a‌t.‌t‌n.‌g‌o‌v.‌i‌n எனும் இணையதளம் மூலம் ஜூலை 9 மாலை 5 மணிக்குள் பூர்த்தி செய்திட வேண்டும். சென்னையில் மாநில தேர்வுகள் நடைபெறும் மையங்களில் ஜூலை 10 காலை 8 மணி அளவில் நேரில் ஆஜராக வேண்டும்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT