பெரம்பலூர்

பைக்கில் இருந்து விழுந்த  பெண் வியாபாரி சாவு

4th Jul 2019 09:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்த பெண் வியாபாரி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தார்.
பெரம்பலூர் அருகேயுள்ள குரும்பலூரை சேர்ந்தவர் பெருமாள் மகன் ஆறுமுகம் (40), வளையல் வியாபாரி. 
இவர், புதன்கிழமை அதிகாலை குரும்பலூரில் இருந்து பெரம்பலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, குரும்பலூர் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்த ஜோதி மனைவி லட்சுமி (55), உழவர் சந்தையில் தக்காளி வியாபாரம் செய்ய ஆறுமுகத்திடம் உதவி கேட்டு அவரது மோட்டார் சைக்கிளில் வந்துகொண்டிருந்தார்.  
பெரம்பலூர்- துறையூர் சாலையில் செஞ்சேரி அருகே வந்துபோது, குடிநீர் பிடித்துக்கொண்டு சாலையைக் கடக்க முயன்ற சின்ராசு மனைவி லெட்சுமி (36) மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது. இதில், மோட்டார் சைக்கிளில் வந்த லட்சுமி தவறி விழுந்து பலத்த காயமடைந்து உயிரிழந்தார். ஆறுமுகமும், நடந்து சென்ற மற்றொரு லட்சுமியும் காயமடைந்து, பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில்  சிகிச்சை பெறுகின்றனர். 
பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT