பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள மஹா செல்வ கணபதி கோயில் வருடாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவையொட்டி, திங்கள்கிழமை காலை கணபதி ஹோமம், புன்யா வாஹனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகளோடு யாக வேள்வி நடைபெற்றது. யாக வேள்வியில் 96 வகையான மூலிகைப் பொருள்கள் செலுத்தப்பட்டு மஹா பூர்னாஹூதி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, செல்வ கணபதிக்கு பால், தயிர், அரிசி மாவு, தேன் மற்றும் பல்வேறு வாசனை தீர்த்தங்களால் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜையும், மஹா தீபாரதனையும் நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.