பெரம்பலூர்

கருப்பு உடை அணிந்து அரசு மருத்துவர்கள் போராட்டம்

2nd Jul 2019 09:24 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் கருப்பு உடை அணிந்து திங்கள்கிழமை பணியில் ஈடுபட்டனர்.  
அரசு மருத்துவர்களுக்கு தகுதிக்கேற்ற காலம் சார்ந்த ஊதியத்தை வழங்க வேண்டும். மருத்துவக் கல்லூரியில் உள்ள பணியிடங்கள் குறைப்பு நடவடிக்கையை கை விடவேண்டும். மருத்துவ மாணவர்களை கலந்தாய்வு மூலம் பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி, அரசு மருத்துவர்கள் கருப்பு தினமாக அனுசரித்து கருப்பு உடை அணிந்து பணியில் ஈடுபட்டனர்.  பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பணிபுரியும் சுமார் 70-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றனர்.
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT