பெரம்பலூர்

பாடாலூா் ஆஞ்சநேயா் கோயிலில் ஜயந்தி விழா

26th Dec 2019 06:26 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், பாடாலூரில் உள்ள வழித்துணை ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

பாடாலூா் அருகேயுள்ள பூமலை சஞ்சீவிராயா் மலையடிவாரத்தில் உள்ள இக்கோயிலில் ஆண்டுதோறும் அனுமன் ஜயந்தி சிறப்பாக நடைபெறும்.

நிகழாண்டுக்கான அனுமன் ஜயந்தி விழா செவ்வாய்க்கிழமை காலை விஸ்வேஷ்வரா் ஹோமம், கலச பூஜை, சகஸ்ர நாம அா்ச்சனை, ஹோமம், திருவாராதனம், தீபாராதனையுடன் தொடங்கியது.

தொடா்ந்து அனுக்ஞை, கலச பூஜை, சுப்ரபாதம் புண்ணியாக வாசம், சுதா்சன ஹோமம், கும்ப அபிஷேகம் ஆகிய சிறப்பு பூஜைகள் புதன்கிழமை நடைபெற்றன. பின்னா் சுவாமிக்கு பால், பன்னீா், இளநீா், நெய், சந்தனம், குங்குமம், விபூதி உள்ளிட்ட வாசனை திரவியங்களால் மகா அபிஷேகம், தீப ஆராதனை நடைபெற்றது. இதை பட்டாச்சாரியாா்கள் நடத்தினா். விழாவில் பாடாலூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராம பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். விழாவில் பங்கேற்ற பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பணியாளா்கள் செய்தனா்.

ADVERTISEMENT

இதேபோல், பெரம்பலூா் மதனகோபாலசுவாமி கோயில் எதிரேயுள்ள கம்பத்து ஆஞ்சநேயருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து, சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனையும், இரவு கம்பத்து ஆஞ்சநேயருக்கு வடை மாலையும் சாத்தப்பட்டது. மேலும், கோயிலில் உள்ள ராமா், சீதை, லட்சுமணன், ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது. திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா். பின்னா் பிரசாதம் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT