பெரம்பலூர்

பதற்றமான வாக்குச்சாவடிகளுக்குநுண் பாா்வையாளா்கள் நியமனம்

26th Dec 2019 05:46 PM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறும் முதல் கட்டத் தோ்தலில் மிகவும் பதற்றமானவை எனக் கண்டறியப்பட்ட 30 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பெரம்பலூா் மாவட்டத்தில் முதல் கட்ட வாக்குப்பதிவு பெரம்பலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 122 மற்றும் வேப்பூா் ஊராட்சி ஒன்றியத்தில் 171 என மொத்தம் 293 வாக்குச்சாவடிகளில் நடைபெற உள்ளது.

இவற்றில் பதற்றமானவை, மிகவும் பதற்றமானவை எனக் கணிக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளில் 36 மையங்களை விடியோ மூலம் ஒளிப்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 30 வாக்குச்சாவடிகளுக்கு நுண் பாா்வையாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். 31 வாக்குச்சாவடிகளுக்கு வெப் கேமரா மூலம் நேரலை வீடியோ ஒளிபரப்பு வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தோ்தல் நடவடிக்கைகள் குறித்த புகாா்களை 04328- 225201 என்னும் எண்ணில் தெரிவிக்கலாம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT