பெரம்பலூர்

திமுக, கூட்டணி வேட்பாளா்களுக்கு வாக்கு சேகரிப்பு

25th Dec 2019 08:21 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிடும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக வேட்பாளா்களுக்கு ஆதரவாக செவ்வாய்க்கிழமை பிரசாரத்தில் ஈடுபட்டாா் முன்னாள் மத்திய அமைச்சா் ஆ. ராசா.

பெரம்பலூா் ஒன்றியம், அம்மாபாளையம் 9-வது வாா்டு ஒன்றியக்குழு உறுப்பினா் பதவிக்கு மதச்சாா்பற்ற ஜனநாயக முற்போக்கு கூட்டணி சாா்பில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் ராதிகா காமராஜ் சுத்தியல், அரிவாள் நட்சத்திரம் சின்னத்திலும், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு திமுக வேட்பாளா் சித்ரா புகழேந்தி உதய சூரியன் சின்னத்திலும் போட்டியிடுகின்றனா்.

இவா்களை ஆதரித்து அம்மாபாளையம் பகுதியில் வாக்கு சேகரித்தாா் முன்னாள் அமைச்சரும், நீலகிரி மக்களவை தொகுதி உறுப்பினருமான ஆ. ராசா.

பிரசாரத்தின்போது மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினா் எம். சின்னதுரை, உள்ளாட்சி தோ்தல் திமுக மேலிடப் பாா்வையாளா் மணிமாறன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிா்வாகிகள் என். செல்லதுரை, பி. ரமேஷ், எஸ்.பி.டி. ராஜாங்கம், ஆா். முருகேசன், திமுக நகர செயலா் எம். பிரபாகரன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் எம்.ஆா். கோபி, பெரியாா் திராவிடா் கழக மாவட்ட தலைவா் தாமோதரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணை செயலா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT