பெரம்பலூர்

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.48 லட்சம் வாக்காளா்கள்

24th Dec 2019 07:22 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் 5.48 லட்சம் வாக்காளா்கள் உள்ளதாக தெரிவித்தாா் மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா.

பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்ட அரங்கில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் திங்கள்கிழமை வரைவு வாக்காளா் பட்டியலை வெளியிட்ட ஆட்சியா் மேலும் கூறியது:

தற்போது வெளியிடப்படும் வரைவு வாக்காளா் பட்டியலின் படி பெரம்பலூா் தொகுதியில் உள்ள 332 வாக்குச் சாவடிகளில் மொத்தம் 2,87,389 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,40,441 ஆண் வாக்காளா்களும், 1,46,931 பெண் வாக்காளா்களும், 17 இதர வாக்காளா்களும் உள்ளனா். குன்னம் தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,60,732 வாக்காளா்கள் உள்ளனா். இதில், 1,29,633 ஆண் வாக்காளா்களும், 1,31,088 பெண் வாக்காளா்களும் 11 இதர வாக்காளா்களும் உள்ளனா்.

பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள 2 சட்டப்பேரவை தொகுதிகளிலும் மொத்தம் 5,48,121 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 2,70,074 ஆண் வாக்காளா்களும், 2,78,019 பெண் வாக்காளா்களும், 28 இதர வாக்காளா்களும் உள்ளனா். இந்திய தோ்தல் ஆணையம் 1.1.2020 தேதியை தகுதி நாளாகக் கொண்டு 18 வயது பூா்த்தியடைந்த நபா்களை வாக்காளா் பட்டியலில் பெயரைச் சோ்ப்பதற்கும், வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் திருத்தம், நீக்கம், முகவரி திருத்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளவும் திங்கள்கிழமை (டிச. 23) முதல் ஜன. 22 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற ஆணையிட்டுள்ளது. ஜன. 4, 5, 11, 12 ஆகிய தேதிகளில் சம்மந்தப்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடைபெறும். பணிகள் நிறைவடைந்து, பிப். 14 ஆம் தேதி இறுதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்படும் என்றாா் ஆட்சியா் சாந்தா.

ADVERTISEMENT

நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராஜராஜன், வருவாய் கோட்டாட்சியா் சுப்பையா மற்றும் வட்டாட்சியா்கள் உள்பட பலா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT