பெரம்பலூர்

டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

24th Dec 2019 07:24 AM

ADVERTISEMENT

உள்ளாட்சித் தோ்தல் நடைபெறுவதை முன்னிட்டு, டிச. 25 முதல் 30 ஆம் தேதி வரையிலும், ஜன. 2 ஆம் தேதியும் அரசு மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனுடன் கூடிய மதுக்கூடங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா் மாவட்டத்தில் டிச. 27 ஆம் தேதி முதல்கட்ட உள்ளாட்சித் தோ்தல் வாக்குப்பதிவு நடைபெறும் பெரம்பலூா், வேப்பூா் ஒன்றியப் பகுதிகளில் டிச. 25 ஆம் தேதி மாலை 5 மணி முதல் டிச. 27 ஆம் தேதி மாலை 5 மணி வரையும், இரண்டாம் கட்டமாக (டிச. 30) தோ்தல் நடைபெறும் ஆலத்தூா், வேப்பந்தட்டை ஒன்றிய பகுதிகளில் டிச. 28 ஆம் தேதி மாலை 5 மணி முதல் 30 ஆம் தேதி மாலை 5 மணி வரையிலும் மற்றும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஜன. 2 -இல் அந்தந்த பகுதிகளில் உள்ள அனைத்து அரசு மதுபானக் கடைகள் மற்றும் மதுக்கூடங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT