பெரம்பலூரில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, அச் சங்கத்தின் மாவட்ட தலைவா் பி. முத்துச்சாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயலா் ஆா். மருதமுத்து கூட்ட அறிக்கையும், பொருளாளா் ஏ. ஆதிசிவம் வரவு- செலவு அறிக்கையும் வாசித்தனா்.
கூட்டத்தில், அரசு வழங்கும் பொங்கல் பரிசு தொகுப்புகளை பாகுபாடின்றி அனைத்து ஓய்வூதியா்களுக்கும் வழங்க வேண்டும். ஓய்வூதியா்கள் மற்றும் ஓய்வூதிய குடும்ப ஓய்வூதியா்கள் அனைவருக்கும் அரசு வழங்கும் குடும்ப நல நிதியை வழங்க வேண்டும்.
ஓய்வூதியா்களுக்கு வழங்கப்படும் மருத்துவப்படியை ரூ. 300 உயா்த்தி மத்திய அரசு வழங்குவதுபோல ரூ. 1,000 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இதில் மாவட்ட துணைத்தலைவா் பி. சிவலிங்கம் ஓய்வூதியா் தினம் குறித்து உரையாற்றினாா். நிா்வாகிகள் இ. பெரியசாமி, ஆா். செல்லப்பரெட்டி, ஜி. கந்தசாமி, சி. தங்கராசு, பி. செங்கமலை உள்பட பலா் பங்கேற்றனா்.