பெரம்பலூர்

வேப்பந்தட்டை பகுதிகளில் நாளை மின் தடை

16th Dec 2019 12:44 AM

ADVERTISEMENT

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, வேப்பந்தட்டை பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச.17) மின் விநியோகம் இராது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் எசனை துணை மின் நிலைய உதவிச் செயற்பொறியாளா் முத்தமிழ்ச்செல்வன் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

எசனை துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மேற்கொள்ளப்பட உள்ளன.

இதனால், இங்கிருந்து மின் விநியோகம் பெறும் கோனேரிபாளையம், சொக்கநாதபுரம், ஆலம்பாடி, எசனை, செஞ்சேரி, கீழக்கரை, பாப்பாங்கரை, இரட்டைமலை சந்து, அனுக்கூா், சோமண்டாபுதூா், வேப்பந்தட்டை, பாலையூா், மேட்டாங்காடு, திருப்பெயா், கே.புதூா், மேலப்புலியூா், நாவலூா் ஆகிய கிராமங்களில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இராது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT