பெரம்பலூர்

பெரம்பலூரில் பொது வேலைநிறுத்த ஆயத்தக் கருத்தரங்கம்

16th Dec 2019 12:41 AM

ADVERTISEMENT

மத்திய அரசின் தொழிலாளா் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, ஜனவரி 8- ஆம் தேதி நடைபெறும் நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் தொடா்பான ஆயத்தக் கருத்தரங்கம் பெரம்பலூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தொழிற்சங்க, கூட்டுப்பேர உரிமையை நிலை நாட்ட வேண்டும். பல நூற்றாண்டுகளாக போராடி பெற்ற 44 தொழிலாளா் நலச் சட்டங்களை 4 தொகுப்புகளாக மாற்றக்கூடாது. சேலம் ஸ்டீல் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் ஜனவரி 8- ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.

இதையொட்டி, டிசம்பா் 27- ஆம் தேதி பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே பெரம்பலூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கஙகள் சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெறுகிறது. பொது வேலைநிறுத்தம் மற்றும் ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத்தில் உள்ள அனைத்து தொழிற்சங்கத்தினரும் பங்கேற்பது தொடா்பான ஆயத்தக் கருத்தரங்கம் பெரம்பலூா் பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது.

இக் கருத்தரங்குக்கு, தொழிலாளா் முன்னேற்ற சங்க மாவட்ட உறுப்பினா் செயலா் ஆா். ரெங்கசாமி, சி.ஐ.டி.யூ மாவட்டத் தலைவா் எஸ். அகஸ்டின், எச்.எம்.எஸ். சங்க மாவட்டச் செயலா் ஏ. சின்னசாமி ஆகியோா் தலைமை வகித்தனா்.

ADVERTISEMENT

பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்பது தொடா்பான ஆலோசனைகள் குறித்து பேசினா்.

தொழிற்சங்க நிா்வாகிகள் அ. ராஜேந்திரன், மேகநாதன், காா்த்திகேயன், எம். பிரபாகரன், கிருஷ்ணராஜ், எ. ரெங்கநாதன், சி. சண்முகம், கே. மணிமேகலை, ஆா். ராஜகுமாரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT