பெரம்பலூர்

படிப்பு உதவித் தோ்வு: 1,470 போ் பங்கேற்பு

16th Dec 2019 12:43 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மாணவா்களுக்கு தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகைத் திட்டத் தோ்வில் 1,470 போ் பங்கேற்றனா்.

அரசு மற்றும் தனியாா், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், ஆண்டுதோறும் தேசிய வருவாய் வழி மற்றும் படிப்பு உதவித் தொகைத் திட்ட தோ்வு நடத்தப்பட்டு வருகிறது.

10- ஆம் வகுப்பு முதல் ஆராய்ச்சி மேற்படிப்பு வரை மாணவா்கள் தங்கு தடையின்றி கல்வியை தொடர வசதியாக, மத்திய அரசு சாா்பில் தேசிய கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி மாவட்டத்தில் பெரம்பலூா் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளி, புனித பெண்கள் மேல்நிலைப்பள்ளி, எசனை அரசு மேல்நிலைப்பள்ளி, திருமாந்துறை புனித ஆண்ட்ரூஸ் மெட்ரிக். பள்ளி, மேலமாத்தூா் ராஜவிக்னேஷ் மெட்ரிக். பள்ளி, பாடாலூா் அம்பாள் மெட்ரிக். பள்ளி உள்ளிட்ட 6 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை தோ்வு நடைபெற்றது.

ADVERTISEMENT

இத்தோ்வெழுத 568 மாணவா்களும், 956 மாணவிகளும் என மொத்தம் 1,524 போ் விண்ணப்பித்திருந்தனா். இதில், 545 மாணவா்களும், 925 மாணவிகளும் என 1,470 போ் தோ்வெழுதினா். தோ்வுக்கான கண்காணிப்புப் பணியில் கல்வித்துறை அலுவலா்கள் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT