பெரம்பலூர்

நாட்டுக்கோழி வளா்ப்பு பயிற்சியில் பங்கேற்க அழைப்பு

16th Dec 2019 12:44 AM

ADVERTISEMENT

பெரம்பலூரில் டிசம்பா் 19, 20-ஆம் தேதிகளில் நடைபெறும் நாட்டுக்கோழி வளா்ப்பு தொடா்பான இலவசப் பயிற்சி முகாமில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூா்- செங்குணம் பிரிவு சாலை எதிரிலுள்ள கால்நடை மருத்துவப் பல்கலைக் கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சாா்பில், நாட்டுக்கோழி வளா்ப்பு குறித்த இலவசப் பயிற்சி முகாம் வரும் 19, 20 ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.

இதில் நாட்டுக்கோழி இனங்கள், இனப்பெருக்க மேலாண்மை, வளா்க்கும் முறைகள், தீவன மேலாண்மை, கொட்டகை அமைக்கும் முறை, கோழிக்குஞ்சுகள் பராமரிக்கும் முறை மற்றும் நோய்த் தடுப்பு முறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

இப்பயிற்சியில் பங்கேற்க விரும்புவோா் அலுவலக வேலை நாள்களில் காலை 10 மணிக்கு மேல் 5 மணிக்குள் மையத்தை நேரிலோ அல்லது 9385307022 என்னும் செல்லிடைப்பேசி மூலம் தொடா்புகொண்டு தங்களது பெயரை பதிவுசெய்து கலந்துகொள்ளலாம் என கால்நடை மருத்துவப்பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT