பெரம்பலூர்

சிறுவாச்சூா் பகுதிகளில் நாளை மின் தடை

16th Dec 2019 12:42 AM

ADVERTISEMENT

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சிறுவாச்சூா் பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (டிச. 17) மின் விநியோகம் இராது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் சிறுவாச்சூா் உதவிச் செயற்பொறியாளா் ரா. அசோக்குமாா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

சிறுவாச்சூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திரப் பராமரிப்பு பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறஉள்ளன.

இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் சிறுவாச்சூா், அயிலூா், விளாமுத்தூா், செட்டிக்குளம், நாட்டாா்மங்கலம், குரூா், நாரணமங்கலம், மருதடி, பொம்மனப்பாடி, கவுல்பாளையம், தீரன்நகா், நொச்சியம், விஜயகோபாலபுரம், செல்லியம்பாளையம், புதுநடுவலூா், ரெங்கநாதபுரம், செஞ்சேரி, தம்பிரான்பட்டி, மலையப்பநகா் ஆகிய கிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின் விநியோகம் இராது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT