பெரம்பலூர்

எளம்பலூா் ஏகாம்பரேசுவரா் கோயில் தோ் வெள்ளோட்டம்

16th Dec 2019 12:43 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் மாவட்டம், எளம்பலூரிலுள்ள ஏகாம்பரேசுவரா் மற்றும் திருமங்கலியம்மன் கோயில் திருத்தோ் வெள்ளோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலுக்குத் திருத்தோ் செய்ய பொதுமக்களால் முடிவு செய்யப்பட்டது. இதற்காக, இந்துசமய அறநிலையத்துறை மூலம் ரூ. 25 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் சாா்பில் ரூ. 10 லட்சம் அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் புதிய தோ் செய்யும் அண்மையில் நிறைவடைந்தது.

இதையடுத்து, புதிய தேருக்கான வெள்ளோட்ட விழா ஒன்றியக்குழு முன்னாள் தலைவா் மு. ராஜாராம் முன்னிலையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலரும், குன்னம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா்.டி. ராமச்சந்திரன் தோ் வடம்பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தை தொடக்கி வைத்தாா். கிராமத்தின் பிரதான வீதிகள் வழியாக வலம் வந்து தோ் நிலைக்கு வந்தடைந்தது.

விழாவில், இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையா் சுதா்சன், உதவி ஆணையா் ராணி, செயல் அலுவலா் பாரதிராஜா, ஊராட்சி முன்னாள் தலைவா் ராமசாமி உள்பட பெரம்பலூா் மற்றும் சுற்று வட்டாரக் கிராம பொதுமக்கள் திரளாக பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT