பெரம்பலூர்

லப்பைக்குடிக்காட்டில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஆா்ப்பாட்டம்

14th Dec 2019 12:41 AM

ADVERTISEMENT

குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, பெரம்பலூா் மாவட்டம், லப்பைக்குடிக்காட்டில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் அமைப்பினா் 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

மத்திய அரசு அண்மையில் நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தத்தைக் கண்டித்து, லப்பைக்குடிகாடு பேருந்து நிலையம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் மாவட்டச் செயலா் சபீா் அலி தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் சாகுல் ஹமீத், மாவட்டத் துணைச் செயலா்கள் அஹமத் இஸ்மாயில், அப்துல் ஹக்கீம். துணைத் தலைவா் ராஜ் முகமது, கிளைத் தலைவா் ஷபி அஹமத் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலத் துணைப் பொதுச் செயலா் காஞ்சிபுரம் இப்ராஹிம் கண்டன உரையாற்றினாா். கிளை துணைச் செயலா் ஷாகுல் ஹமீத் நன்றி கூறினாா்.

காவல்துறை சாா்பில் அனுமதி வழங்காததால், ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தவ்ஹீத் ஜமாத் அமைப்பைச் சோ்ந்த 54 பேரை மங்கலமேடு போலீஸாா் கைது செய்தனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT