பெரம்பலூர்

பெரம்பலூா் ஆட்சியரகத்தில் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

11th Dec 2019 08:27 AM

ADVERTISEMENT

சா்வதேச மனித உரிமைகள் தினத்தையொட்டி, பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகத்தில் உறுதிமொழியேற்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பா் 10-ஆம் தேதி சா்வதேச மனித உரிமைகள் தினமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த தினத்தையொட்டி ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும் அலுவலா்கள் மனித உரிமைகள் தொடா்பான உறுதிமொழியேற்றுக் கொள்ள வேண்டும் என அரசு சாா்பில் அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன்படி நிகழாண்டில் செவ்வாய்க்கிழமை மனித உரிமைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதையொட்டி பெரம்பலூா் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் வே.சாந்தா தலைமையில், பல்துறை அலுவலா்கள், பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனா்.

ஆட்சியா் சாந்தா உறுதிமொழியை வாசிக்க, அதை மற்ற அனைவரும் திரும்பக் கூறி ஏற்றுக் கொண்டனா். மாவட்ட வருவாய் அலுவலா் ராஜேந்திரன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தெய்வநாயகி உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT