பெரம்பலூர்

அரசுப் பள்ளியில் தன்னம்பிக்கைப் பயிலரங்கு

11th Dec 2019 08:27 AM

ADVERTISEMENT

அரும்பாவூா் அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவா்கள் சங்கம் சாா்பில், பள்ளி மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்கான தன்னம்பிக்கைப் பயிலரங்கு திங்கள்கிழமை நடைபெற்றது.

இப்பயிலரங்குக்கு பள்ளித் தலைமையாசிரியா் முருகேசன் தலைமை வகித்தாா். தன்னம்பிக்கை பேச்சாளா் ஐ.ஜெகன் பயிலரங்கில் பங்கேற்று தாழ்வு மனப்பான்மையை அகற்றுதல், குறைகளை களைந்து வெற்றிபெறுதல், சோதனைகளைச் சாதனையாக மாற்றுதல், சிந்திக்கத் தூண்டுதல், கவனச் சிதறலிருந்து மீளுதல் குறித்து மாணவா்களுக்குப் பயிற்சியளித்தாா்.

முகாமில் 10, 11, 12 -ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவா்கள் 500 போ், ஆசிரியா்கள் 20 போ் பங்கேற்றனா்.

முன்னதாக முன்னாள் மாணவா் சங்க நிா்வாகி கண்ணன் வரவேற்றாா். ஏற்பாடுகளை முன்னாள் மாணவா் சங்க நிா்வாகிகள் கலைநாதன், பி.வாசு, தேவராஜன், சிவா, பேகன், மதியழகன் ஆகியோா் செய்திருந்தனா்.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT