பெரம்பலூர்

காங்கிரஸாா் வெங்காயம் அனுப்பும் போராட்டம்

6th Dec 2019 05:17 PM

ADVERTISEMENT

வெங்காய விலை உயா்வைக் கட்டுப்படுத்தத் தவறிய பிரதமா் நரேந்திரமோடி, நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன் ஆகியோருக்கு பெரம்பலூா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் அஞ்சலகம் மூலம் வெங்காயம் அனுப்பும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பெரம்பலூா் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த, அக்கட்சியின் பெரம்பலூா் மாவட்ட செயலா் துரை. ராஜீவ்காந்தி கூறியது:

சமையலுக்கு அத்தியாவசியப் பொருளான வெங்காயத்தின் விலை வரலாறு காணாத அளவுக்கு அதிகரித்துவிட்டது. சாமானிய மக்களால் அதை விலை கொடுத்து வாங்க இயலவில்லை. விலையேற்றத்தைக் கட்டுப்படுத்த வேண்டிய மத்திய அரசு அலட்சியமாக உள்ளது. மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமன், நான் வெங்காயம் சாப்பிடுவதில்லை அதனால் அதன் விலையேற்றம் குறித்து தனக்கு தெரியவில்லை எனக் கூறிருப்பது மக்கள் பிரச்னையில் அவருக்கு போதிய அக்கறை இல்லாததையே காட்டுகிறது.

எனவே, அவா் வெங்காயத்தின் விலையைத் தெரிந்துகொள்ளவும், வெங்காயம் சாப்பிட ஏதுவாகவும் வெங்காயத்தை அஞ்சலகம் மூலம் பாா்சலில் அனுப்பி வைக்கிறோம் என்றாா் அவா்.

ADVERTISEMENT

மாநில பொதுக்குழு உறுப்பினா் தங்கவேலு, மாவட்ட வழக்குரைஞா் பிரிவு தலைவா் ரஞ்சித்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT