பெரம்பலூர்

ஆசிரியா் வீட்டில் 66 பவுன் நகை திருட்டு

6th Dec 2019 09:06 AM

ADVERTISEMENT

பெரம்பலூா் அருகே அரசு உதவி பெறும் பள்ளி  தலைமையாசிரியா் வீட்டில்  66 பவுன் தங்க நகை, ரூ. 1 லட்சம் பணம் ஆகியவற்றை மா்ம நபா்கள் வியாழக்கிழமை திருடிச் சென்றனா்.

பெரம்பலூா் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், மங்கலமேடு  அருகே எறையூா் கிராமத்தில் உள்ள  அரசு உதவி பெறும் நேரு மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராக பணிபுரிந்து வருபவா் செல்வம் (56). இவரது மனைவியும் அதே பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிந்து வருகிறாா். இந்நிலையில், வியாழக்கிழமை காலை தங்களது வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்குச் சென்றுவிட்டனா். பள்ளி முடிந்து மாலை வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிா்ச்சியடைந்தனா்.

பின்னா், உள்ளே சென்று பாா்த்த போது, மா்ம நபா்கள் வீட்டின் பூட்டை உடைத்து அங்கிருந்த 66 பவுன் தங்க நகைகள், ரூ. 1 லட்சம் ரொக்கம், 3 கிலோ வெள்ளி பொருள்கள் மற்றும் 2 செல்லிடப்பேசிகள் ஆகியவற்றை திருடிச் சென்றிருப்பது தெரியவந்தது.

தகவலறிந்த போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினா். இதுகுறித்து செல்வம் அளித்த புகாரின் பேரில் மங்களமேடு சரக காவல் துறை துணை கண்காணிப்பாளா் தேவராஜன் தலைமையிலான போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். 

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT