பெரம்பலூர்

பெரம்பலூர் நகரில் நாளை மின் தடை

28th Aug 2019 10:27 AM

ADVERTISEMENT

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக, பெரம்பலூர் நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக. 29) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் பெரம்பலூர் உதவிச் செயற்பொறியாளர் கி. மாணிக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: 
பெரம்பலூர் தானியங்கி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும் பெரம்பலூர் பழைய, புறநகர் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குச்சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, கே.கே. நகர், அபிராமபுரம், சிறுகுடல், அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ். குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர் மற்றும் சமத்துவபுரம் ஆகிய பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்பு பணி முடியும் வரை மின் விநியோகம் இருக்காது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT