பெரம்பலூர்

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்கான விருதுபெற விண்ணப்பிக்கலாம்

28th Aug 2019 10:55 AM

ADVERTISEMENT

பெண் குழந்தைகளின் மேம்பாட்டுக்காக செயல்புரிந்த குழந்தைகள், மாநில விருது பெற விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், தொழிலாளர் முறையை ஒழிக்கவும், பெண் குழந்தை திருமணங்களைத் தடுக்கவும் பாடுபட்டு வீர, தீர செயல் புரிந்து வரும் 18 வயதுக்குள்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், மாநில விருது வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது.  
இந்த விருதுக்கான விண்ணப்பங்களை தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட திட்ட அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் மூலமாக உரிய முன் மொழிவுகளுடன் மாவட்ட சமூக நல அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும். 
விண்ணப்பங்கள் கூர்ந்தாய்வு செய்து, மாவட்ட ஆட்சியர் பரிந்துரையுடன் சமூக நல ஆணையரகத்துக்கு பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்படும். பெறப்படும் விண்ணப்பங்கள் மாநில அளவில் தேர்வுக்குழு மூலம் பரிசீலனை செய்யப்பட்டு, அனைத்து தகுதிகள் பெற்ற ஒரு பெண் குழந்தை தேர்வு செய்யப்பட்டு அடுத்த ஆண்டு ஜனவரியில் விருது வழங்கப்படும்.

ADVERTISEMENT
ADVERTISEMENT