பெரம்பலூர்

இயற்பியல் துறை கூட்டமைப்பு தொடக்கம்

23rd Aug 2019 09:36 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் ஸ்ரீசாரதா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இயற்பியல் துறை சங்க தொடக்க விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். சிவசுப்பிரமணியம் தலைமை வகித்தார், செயலர் எம்.எஸ். விவேகானந்தன், முதல்வர் எம். சுபலெட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழக இயற்பியல்துறை பேராசிரியர் முனைவர் எம். கர்ணன், வாழ்க்கை ஓர் இயற்பியல் எனும் தலைப்பில் இயற்பியலின் தோற்றம், அடிப்படை கருத்துகள், அன்றாட வாழ்வில் இயற்பியலின் அடிப்படை பயன்பாடுகள், தொழில்நுட்பம், எதிர்கால தொழில்நுட்ப வளர்ச்சியின் முன்னேற்றங்கள், அவற்றின் முக்கியத்துவங்கள் மற்றும் பயன்பாடுகள் குறித்து விளக்கி பேசினர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இயற்பியல் துறைத்தலைவி வி. கற்பகம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். விழாவில், இயற்பியல் துறையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர். இளங்கலை இயற்பியல் துறை மாணவி எஸ். செல்சியா வரவேற்றார். மாணவி எஸ். சாருஹாசினி நன்றி கூறினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT