பெரம்பலூர்

பள்ளி, கல்லூரிகளில் சுதந்திர தின விழா  கொண்டாட்டம்

16th Aug 2019 08:54 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 73- வது சுதந்திர தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின் சார்பில் நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்து, தேசிய கொடியேற்றிய தாளாளர் அ. சீனிவாசன் பேசுகையில்,  தொடர் பயிற்சியை கடைபிடித்தால் வாழ்க்கையில் எதையும் வெல்லாம் என்றார். 
தொடர்ந்து,  அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற அணியினர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டது.  கல்லூரி வளாகத்தில் 73 மரக்கன்றுகள் நடப்பட்டன.  
கல்வி நிறுவனங்களின் செயலர் பி. நீலராஜ், அறக்கட்டளை உறுப்பினர்கள் பி. ராஜாபூபதி, பி. மணி, சேகர், மருத்துவக் கல்லூரி டீன் மரகதமணி, கண்காணிப்பாளர் நீலகண்டன் மற்றும் கல்லூரி மற்றும் பள்ளி முதல்வர்கள், துணை முதல்வர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 
ரோவர் கல்வி நிறுவனம்:
பெரம்பலூர் ரோவர் கல்வி நிறுவனங்கள் சார்பில் நடைபெற்ற விழாவில், துணைத் தலைவர் வி. ஜான் அசோக் முன்னிலையில், தேசியக் கொடியேற்றி வைத்தார்  தாளாளர் கே. வரதராஜன்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது. 
கல்லூரி முதல்வர்கள் விஜயகுமார், கணேஷ்பாபு, ஆனந்த், துணை முதல்வர்கள் பெரியசாமி, மகேந்திரன், அலுவலக மேலாளர் ஆனந்த் உள்பட பலர் பங்கேற்றனர். 
ராமகிருஷ்ண கல்வி நிறுவனம்: 
விழாவில்  தாளாளர் எம். சிவசுப்ரமணியம் தலைமையில், செயலர் எம். எஸ். விவேகானந்தன் தேசியக் கொடியேற்றினார்.  கலை நிகழ்ச்சிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.  கல்லூரி முதல்வர்கள் எம். சுபலட்சுமி, ராஜசேகர், பத்மலால், பால்வண்ணன், மோகன், பள்ளி முதல்வர்கள் கோமதி, கலைச்செல்வி, பிரமிளா, சத்யா உள்பட பலர் பங்கேற்றனர். 
கேந்திரிய வித்யாலயா: பள்ளி முதல்வர் கல்யாண்ராமன்  கொடியேற்றினார்.  தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.   
ஆல்மைட்டி வித்யாலயா: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் உள்ள பள்ளியில் நடைபெற்ற விழாவில், பள்ளி தலைவர் ராம்குமார் தேசியக்கொடியேற்றினார்.  கலை நிகழ்ச்சி, போட்டிகள் நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டது.பள்ளி செயலர் சிவக்குமார், பங்குதாரர்கள் ரெங்கசாமி, மோகனசுந்தரம், முதல்வர் சிவகாமி, துணை முதல்வர் சாரதா மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
இதேபோல, மாவட்டத்தில் உள்ள குரும்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர் பகுதி அரசு கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் சுதந்திர தின விழா நடைபெற்றது.
அரியலூர்,: அரியலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளி,கல்லூரிகளில் சுதந்திர தின விழா வியாழக்கிழமை  கொண்டாடப்பட்டது.
கல்லக்குடியிலுள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை திருமலைச்செல்வி தேசிய கொடியேற்றினார். பின்னர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பள்ளகிருஷ்ணாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியை மங்கையர்க்கரசி தேசிய கொடியேற்றி பரிசு வழங்கினார்.
அரியலூர் மான்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் முதல்வர்  அந்தோணிசாமிசெழியன் தேசிய கொடியேற்றினார்.  கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் பள்ளி உள்பட மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளிலும் விழா கொண்டாடப்பட்டது. 
அரியலூர் அரசு கலைக் கல்லூரி... அரியலூர் அரசு கலைக் கல்லூரியில்  முதல்வர் (பொ) பெ. ஜெயகுமார் தேசிய கொடியேற்றினார்.கல்லூரி முன்னாள் முதல்வர் இல. தியாகராஜன் பரிசு வழங்கினார். 
 ஏற்பாடுகளை நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் வெ. கருணாகரன், கோ. ராஜசேகர், ப. செல்வமணி ஆகியோர் செய்தனர். 
மீனாட்சி ராமசாமி கல்லூரி....உடையார்பாளையம் அடுத்த தத்தனூர் மீனாட்சி ராமசாமி கல்லூரி கலைக் கல்லூரி,மெரிட் கல்வியியல் கல்லூரி,பாலிடெக்னிக் கல்லூரி,மீனாட்சி ராமசாமி வித்யாலயா,மேல்நிலைப் பள்ளி, மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் நடைபெற்ற  விழாவில் அதன் தாளாளர் ரகுநாதன் தேசிய கொடியேற்றினார். 
விநாயகா கல்வியியல் கல்லூரியில் அதன் தாளாளர் பாஸ்கர் கொடியேற்றினார். மாவட்ட மைய நூலகம்.. தலைமை நூலகர் ஸான்பாட்ஷா தேசிய கொடியேற்றினார்.நூலகர் செசிராபூ, வாசகர் வட்டத் தலைவர் சீனி.பாலகிருஷ்ணன்  இனிப்புள வழங்கினார்.
 

ADVERTISEMENT
ADVERTISEMENT