பெரம்பலூர்

செஞ்சிலுவை சங்க  ஜூனியர் தலைவர்களுக்கு மாவட்ட அளவிலான பயிற்சி முகாம்

11th Aug 2019 04:46 AM

ADVERTISEMENT


பெரம்பலூர் மாவட்ட இளையோர் செஞ்சிலுவை அமைப்பின் சார்பில், மாவட்ட அளவில்  ஜூனியர் தலைவர்களுக்கான பயிற்சி முகாம் செட்டிக்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.
இப் பயிற்சி முகாமை, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கு. அருளரங்கன் கொடியேற்றி தொடக்கி வைத்தார். பெரம்பலூர் மாவட்ட 
கல்வி அலுவலர் அ. மாரி மீனாள் முன்னிலையில், வேப்பூர் கல்வி மாவட்ட அலுவலர் குழந்தைராஜன், ஜீன் ஹென்றியின் படத்தை திறந்து வைத்து பேசினார். 
மாவட்ட கன்வீனர் வீ. ராதாகிருஷ்ணன் முகாம் குறித்த விளக்க உரையாற்றினார். 
வட்டாரக் கல்வி அலுவலர் ராமதாஸ், உதவித் தலைமை ஆசிரியர் மணி, மண்டல அலுவலர் ராஜா ஆகியோர் செஞ்சிலுவை சங்க வரலாறு, கொள்கைகள் குறித்து விளக்கினர்.
தொடர்ந்து, சனிக்கிழமை நடைபெற்ற முகாமில் யோகா பயிற்றுநர் சாந்தக்குமார், யோகா மற்றும் உடற்பயிற்சி அளித்தார். மருத்துவர்கள் காமராஜ், செந்தில்குமார் ஆகியோர் 
இயற்கை மருத்துவத்தின் அவசியம் குறித்தும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி மாவட்ட அலுவலர் உ. தாமோதரன், தீயணைப்பு முறைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும் செயல்முறை பயிற்சி அளித்தனர். கைவினை பயிற்றுநர் கயல்விழி, கைவினைப் பொருள்கள் தயாரிப்பு குறித்தும், சாரணிய மாவட்ட செயலர் தனபால், தொண்டின் சிறப்பு குறித்தும் விளக்கி பேசினர். இப் பயிற்சி முகாமில் 76 பள்ளிகளைச் சேர்ந்த 684 ஜூனியர்கள் பங்கேற்று பயிற்சி பெறுகின்றனர். பயிற்சி முகாம் நிறைவு விழா ஞாயிற்றுக்கிழமை (ஆக.11) மாலை நடைபெறுகிறது. 
 

ADVERTISEMENT
ADVERTISEMENT