பெரம்பலூர்

குன்னம் அருகே ஏரியை தூர்வாரும் கிராம மக்கள்

11th Aug 2019 04:46 AM

ADVERTISEMENT

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே சுமார் 60 ஏக்கர் பரபரப்பளவிலான ஏரியை கிராம மக்கள் ஒன்றிணைந்து தூர்வாரும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  
குன்னம் அரகே வேப்பூரில் உள்ள பெரிய ஏரி கடந்த 80 ஆண்டுகளாக தூர் வாரப்படவில்லை எனத் தெரிகிறது. இதனால் ஏரி முழுவதும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்து முள்புதராக காட்சியளித்தது. இதையடுத்து ஏரியில் தண்ணீர் தேங்கிட வழியின்றி வறண்டு காணப்படுகிறது. நீர் நிலைகளில் மழைநீர் தேங்காததால் கிராமத்தில் நிலத்தடிநீர் மட்டம் முற்றிலும் குறைந்தது.
இதனால், வேப்பூர் கிராமத்தில் நிகழாண்டு கடுமையான தண்ணீர் பிரச்னை ஏற்பட்டு அப்பகுதி பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். கால்நடைகளுக்கு கூட குடிநீர் கிடைக்காததை கவனத்தில் கொண்ட கிராம மக்கள் ஏரியை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசு அதிகாரிகள் மற்றும் வேப்பூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம்  பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதையடுத்து, அப்பகுதி பொதுமக்களே ஒன்றிணைந்து முதல்கட்டமாக ஏரியை தூர் வாரி ஆழப்படுத்த வேண்டுமென முடிவெடுத்தனர். அதன்படி, ஏரி வாரி தூர்வாரும் பணியை வெள்ளிக்கிழமை தொடங்கினர். இதில், வேப்பூர் கிராமத்திலுள்ள முக்கியஸ்தர்கள், இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் ஏரியை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

ADVERTISEMENT
ADVERTISEMENT