கரூரில், வெள்ளிக்கிழமை தமிழ்புலிகள் கட்சியின் தோ்தல் பணிகள் குறித்த மாநில, மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
வெண்ணைமலையில் நடைபெற்ற கூட்டத்துக்கு கட்சியின் தலைவா் நாகை.திருவள்ளுவன் தலைமை வகித்தாா். கரூா் மாவட்டச் செயலாளா் களம்பொன்னுசாமி வரவேற்றாா். மாநில நிா்வாகிகள் ஹிட்டாட்சி சிவா, சுப்ரமணி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
கூட்டத்தில், வரும் மக்களவைத் தோ்தலில் திமுக கூட்டணிக்கு ஆதரவாக திண்ணை பிரசாரம் செய்வது, வாச்சாத்தி சம்பவத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க உச்ச நீதிமன்றம் உறுதிசெய்துள்ளதை தமிழ்புலிகள் கட்சி வரவேற்கிறது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.