கரூரில் வெள்ளிக்கிழமை ரயில் மறியலுக்கு முயன்ற ஆதித் தமிழா் கட்சியினா் 6 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
தமிழகத்தில் மத்திய அரசின் விஸ்வகா்மா யோஜனா திட்டத்தை கைவிடக்கோரி கரூரில் ஆதித்தமிழா் கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளா் ராஜீவ்காந்தி தலைமையில் அக்கட்சியினா் வெள்ளிக்கிழமை கரூா் ரயில் நிலையம் முன் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்னா் நண்பகல் 12 மணியளவில் திருநெல்வேலியில் இருந்து கரூா் நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலை மறிக்க ரயில்நிலையத்துக்குள் நுழைய முயன்றனா். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கரூா் நகர காவல்நிலையத்தினா் அக்கட்சியினா் 6 பேரை கைது செய்தனா்.