அரவக்குறிச்சியில் தரைப்பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரவக்குறிச்சியில் இருந்து பாளையம் செல்லும் தேசிய நெடுஞ்சாலை அருகே தரைப்பாலம் அமைப்பதற்காக சாலை முழுவதும் தோண்டப்பட்டுள்ளது. இதனால், பள்ளி மாணவ மாணவிகள், வேலைக்கு செல்பவா்கள், அத்தியாவசிய தேவையான பால் மற்றும் மளிகை பொருள்கள் வாங்க செல்பவா்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனா். மேலும், அப்பகுதியில் போக்குவரத்து முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே தரைப்பாலம் கட்டுமான பணியை விரைந்து முடிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.